செவ்வாய், 23 நவம்பர், 2010

கைத்தொலைபேசி கோலர் டியூனாக தேசிய கீதத்தை பயன்படுத்த தடை

கைத்தொலைபேசி இலக்கத்தை டயல் செய்ததும், வழக்கமான டிரிங், டிரிங் என்ற ஒலிக்கு பதிலாக பிடித்த பாடலை ஒலிக்கச் செய்வது இன்றைய நாகரிகம்.

இந்த வசதிக்கு பெயர் கோலர் டியூன். காதலிக்கு ஒரு கோலர் டியூன் மற்றவர்களுக்கு வேறொன்று என்று விதவிதமாக பாடல்களை தேர்வு செய்து அசத்தும் வசதி உள்ளது. இந்த நிலையில் ஒரு சில கைத்தொலைபேசி நிறுவனங்கள் தேசிய கீதத்தை கோலர் டியூனாக அறிமுகப்படுத்தி உள்ளன. இதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக கைத்தொலைபேசி நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கை, தேசிய கீதத்தை கைத்தொலைபேசி கோலர் டியூனாக பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும்.

எனவே இந்த சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறினால் அனுமதி அட்டை விதிமுறைகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல