சீனாவில், திருமண வைபவத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே திருமண அல்பங்களை தயாரித்துவிடும் வழக்கம் உள்ளது. சில தசாப்தங்களாக மேற்கத்தேய பாணி ஆடைகளுடன் திருமண அல்பங்களுக்கான புகைப்படங்களுக்கு மணமக்கள் போஸ்கொடுத்து வந்தனர்.
ஆனால் தற்போது மணமக்கள் சிலர் எதுவும் வேண்டாம் என நிர்வாண கோலத்தில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கின்றனராம். இந்த வழக்கம் படிபடியாக அதிகரித்து வந்ததால் சீன அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் சீன புகைப்படக் கலைஞர்கள் சங்கம் பதறியடித்துக்கொண்டு இந்த புதிய வழக்கத்தை தடை செய்துள்ளது.
ஆதாம்- ஏவாள், தேவதைகள், புராதன கிரேக்க கடவுள்கள் ஆகிய தொனிப்பொருள்களில் இந்த அல்பங்கள் தயாரிக்கப்பட்டன. சில அல்பங்கள் மென் பாலியல் படங்களின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டனவாம்.
திருமணம் என்பது புனிதமான சடங்கு. அது மதிக்கப்பட வேண்டுமென நாம் விரும்புகிறோம் என சீன புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஹீ லின் கூறியுள்ளார்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக