செவ்வாய், 23 நவம்பர், 2010

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நூடுல்ஸ், கேக்

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மண்பானையில் வைத்து புதைக்கப்பட்ட நூடுல்ஸ், கேக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தினை மாவில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், கேக் நிரப்பப்பட்ட மண்பானை கிடைத்தது. கேக்குகள் முட்டை வடிவிலும், சீனாவின் தற்போதைய தயாரிப்பான முழுநிலவு வடிவத்திலும் இருந்தன.

மற்றொரு மண்பானையில் கஞ்சி இருந்தது. இத்துடன் ஆட்டின் தலையும் காணப்பட்டது. மேலும், இங்கு புதைக்கப்பட்டிருந்த வில், அம்பு, தோலினால் ஆன மார்பு கவசம், கத்திகள், மரத்திலான செருப்புகள், ஸ்வட்டர் ஆகியவையும் தோண்டி எடுக்கப்பட்டன.

பேக் செய்யப்படும் ரொட்டிகளை முதன் முதலில் எகிப்து பண்டைக்கால மக்கள் தயாரித்தனர் என்று கருதப்பட்டது. ஆனால், இவர்களுக்கு முன்பே உலகிலேயே முதன் முதலாக சீனாவின் தனிப்பட்ட மனிதர்கள் எந்த வசதிகளும் இல்லாத காலத்திலும், சிரத்தையுடன் கேக், நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. சீன அறிவியல் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் ஒய்வென் கோங் கூறுகையில், ‘தீ மற்றும் அரை கல் உதவியுடன் சமைக்கப்பட்ட பருப்பு உணவுகளை சீனர்கள் சாப்பிட்டுள்ளனர்’ என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல