இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவரே ஆவார். இவரது அரசு கியூபாவின் ஏவுகணை விவகாரம், பேர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955�1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.
நவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவர் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானார். ஆனால் இவன் இரண்டு நாட்களின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரேயே ஜாக் ரூபி என்பவரால் கொல்லப்பட்டார்.
கொலை விசாரணையை நடத்திய வாரன் கமிஷன் ஒஸ்வால்ட் என்பவர் வேறொரு உதவியுமின்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது. ஆனாலும், 1979 இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்தது. இக்கொலைக்கான பின்னணி இதுவரையில் அறியப்படவில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக