செவ்வாய், 23 நவம்பர், 2010

வில்லியம்தான் அடுத்த மன்னராக வேண்டும், சார்ல்ஸ் வேண்டாம்

இளவரசர் வில்லியம் தான் அடுத்த மன்னராக முடி சூடப்பட வேண்டும் என்று இங்கிலாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் வில்லியமின் மனைவியாக கேட் மிடில்டன் வரவுள்ளதையும் இங்கிலாந்து மக்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர்.

இங்கிலாந்தின் “நியூஸ் ஆப் தி வேர்ல்டு' செய்தித்தாள் நடத்திய ஐ.சி.எம். கணக்கெடுப்பில் 64 சதவிகித மக்கள் வில்லியமும், அவரது வருங்கால மனைவியும் தான் அரியணை ஏற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சன்டே டைம்ஸ் நடத்திய யூகவ் கணக்கெடுப்பில் பெரும்பாலானோர் தந்தை சார்ல்ஸை விட மகன் வில்லியம் சிறந்த அரசராக இருக்கக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது ராணியாக இருக்கும் எலிசபெத்தை (வயது 84) அடுத்து மகுடம் சூட்டப்பட வேண்டியவர் சார்ல்ஸ் (வயது 62) தான். ஆனால் அதற்கு மக்க ளிடையே ஆதரவு இல்லை.

இருப்பினும், யார் அடுத்த மன்னராக வர வேண்டும் என்று மக்களால் நிர்ணயிக்க முடியாது.

இந்நிலையில் ஐ.டி.எம். கணக்கெடுப்பில் 5 இல் ஒருவர் தான் சார்ல்ஸ், கமிலாவுக்கு ஆதரவாக உள்ளனர் என்று கண்டுபி டிக்கப்பட்டுள்ளது.

யூகவ் கணக்கெடுப்பில் 44 சத விகித மக்கள் சார்ல்ஸ், தாமாக தனது மகனுக்கு வழி விட வேண்டும் என்றும், 37 சதவீதம் பேர் அவர் அவ்வாறு விலகிவி டக் கூடாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வில்லியம் (வயது 28), கேட் மிடில்டனும் (வயது 28) இந்த வாரம் தான் தங்கள் நிச்சயதார்த்தத்தைப் பற்றி அறிவித்தனர்.

சிலர் சார்ல்ஸுக்கு வயதாகி விட்டதால் அவரால் சிறப்பாக செயலாற்ற முடியாது என்று கருதுகின்றனர். அவர் மனைவி கெமிலாவால் டயானாவின் புக ழுக்கு அருகில் கூட வரமுடியவில்லை.

சார்ல்ஸ் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கமிலா ராணி யாகக்கூடும் என்று கூறிய மறு நாளே இந்த கணக்கெடுப்புகள் நடந்தன.

சார்லஸ் தனது நெடுநாள் காதலியான கமிலாவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சி.என். என். நடத்திய கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் வில்லியம் திருமணம் நடப்பது நல்லது என்றனர்.

பெரும்பாலான மக்கள் வில்லியம் திருமணத்தை வரவேற்றாலும், நாடு இருக்கும் நிலையில் பிரமாண்ட திருமணம் பொருளாதாரப் பிரச்சிசனையை மேலும் அதிகரிக்கும் என்று கருதுகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல