இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தலா 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தம்மை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்க தாம் அங்கு வந்ததாகவும் காவற்துறையினரிடம் கூறியுள்ளனர். பிரகாஷ் இவர்கள் அனைவரையும் கோயம்பேட்டுக்கு வருமாறு அங்கு அவர்களிடம் இருந்து பணம் பெற்றக்கொண்டு வேன் மூலம் ஈஞ்சம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதுபோன்று பலமுறை இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரகாஷ் தங்களிடம் கூறியுள்ளதாக, கைதுசெய்யப்பட்டவர்கள் காவற்துறையினரிடம் கூறியுள்ளனர். இவர்களை கைதுசெய்த நீலாங்கரை காவற்துறையினர், அவர்களை கியூ பிரிவு காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து இலங்கை அதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய 5 பேரை கைதுசெய்யயும் இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக பணம் பறித்த பிரகாஷையும் கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக