சனி, 18 டிசம்பர், 2010

அவலம் தொடரும் நிலையில் யாழ் ஆயரின் கருத்து வேதனையளிக்கிறது

கொடிய யுத்தம் உயிரழிவுகள் இழப்புக்கள் அதனால் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவலங்கள் இவையனைத்திற்கும் மத்தியில் யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகத்தின் கருத்து தமிழ் மக்களிடத்தில் வேதனையைத் தருவித்திருப்பதாக முன்னாள் எம்.பியான எம்.கே. சிவாஜி லிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அடைக்கல மாதா பேராலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நத்தார் கீத நிகழ்வில் கலந்து கொண்ட ஆயர் நீண்ட காலப் போரை முடிவுக்கு கொண்டு வந்த படையினருக்கு நன்றி செலுத்த வேண் டும் எனத் தெரிவித்துள்ளார். எனினும் இது எந்த அடிப்படையிலான கருத்து என்பது புரி யாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யுத்தம் நிறைவுக்கு வந்தமை உண்மைதான். ஆனாலும் அது எவ்வாறு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மீள்குடியேற்றம் என்பது நேர்மையானதாகத் தெரியவில்லை. குறைபாடுகளுக்கு தீர்வில்லை.

போரின் போதும் அதன் பின்னரும் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னும் சிறைகளுக்குள் வாடிக்கொண்டி ருக்கின்றனர்.

ஒருபுறத்தில் தமிழர் காணிகள் பறிக்கப்படுகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் தனது சாட்சியத்தின்போõது பலவந்தமான குடியேற்றங் கள் இன முறுகலையே ஏற்படுத்தும் என்ற தொனியில் கூறியிருந்தார்.

இதனை இயேசுபிரானே இறங்கி வந்து கூறியதாக தமிழ் மக்கள் நம்பினர். இப்படி இருக்கும்போது யாழ். ஆயரின் மேற்படி கருத்தானது வேதனையைத் தருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல