சனி, 18 டிசம்பர், 2010

அரை மனிதன் அரை மரம் (படங்கள் இணைப்பு)

ஒரு மனிதனின் உடற் பகுதியில் மரக்கணுக்கள் போல கட்டிகள் வளர்ந்து விகாரமாகத் தோற்றமளிக்கின்றன. இந்தோனேஷிய ஜகாத்ரா நகரில் உள்ள இந்த மனிதனை மரமனிதன் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

இது ஒரு வகை வைரஸ்களால் ஏற்பட்டது.

நோயெதிர்ப்புச் சக்தி குறைவடைந்ததன் காரணமாக இந்த நோய் அருமையாக உருவாகிறது. இதற்கு விட்ட மின் ஏ சத்து கொடுத்து நோயைக் குணப்படுத்தி விட முடியும் என அமெரிக்க டாக்டர் அந்தனி ஹாஸ்பி கூறியிருக்கிறார்.

மெரிலாந்து பல்கலைக்கழக வைத்திய நிபுணர் அந்தனி, தெடி என்னும் பெயரையுடைய மர மனிதனை, ஒரு விவரணச் சித்திர படப்பிடிப்பின் போது சந்தித்திருக்கிறார் இந்த மனிதர் மேல் பரிதாபப்பட்டு, இலவச சிகிச்சை வழங்க ஹாஸ்பிரி முன் வந்திருக்கிறார். இந்த மரமனிதனுக்கு மனைவியும் இரு பிள்ளைகளும் உண்டு.

“நான் முதன் முதலில் மர மனிதனைப் பார்த்த போது பெரிதும் ஆச்சரியம் அடைந்தேன். ஒரு சதைப் பிண்டமாகவே அவரை நான் பார்த்து பரிதாபமடைந்தேன். தெடி கைவிடப்பட்ட நிலையில் இருந்தார். மிகவும் புத்திசாலி பரிதாபமாக கட்டிகளினால் கட்டுண்டு கிடந்தார். ஆரம்பத்தில் தெடியின் பிணிக்கு பரம்பரைக் கோளாறே காரணம் எனக் கூறப் பட்டது. இருப்பினும் எங்கள் பரிசோதனைகள் அவ்வாறு இல்லை என தெரிவித்தன.

குழப்பமடைந்த டாக்டர் அந்தனி, தெடியின் குருதி மாதிரிகளை எடுத்து பரிசோதித்து ஆராய்ந்து பார்த்தார். அந்த நோய் மனித பப்பிலோமா வைரசால் உருவாகியிருக்கிறது. இதுவே உடல் கட்டிகளை உருவாக்கும் பொதுவான வைரஸ் என அறிந்து கொண்டார்.

வேறொரு அரிய நிலைமையால் தெடியின் நோயெதிர்ப்புச் சக்தி சாதாரண மனிதருடையது போன்று தொழிற்படவில்லை. எனவே, தான் முட்கள் போன்ற இந்த உடல் கட்டிகள் உருவாகியிருக்கின்றது என டாக்டர் அந்தனி கூறினார். டாக்டர் அந்தனி, தெடியின் வாழ்வு காலம் விட்ட மின் ஏ இல் தங்கியிருக்கிறது என நம்பினார். விட்டமின் ஏ கட்டிகளின் வளர்ச்சியைக் குறைத்து அவற்றைச் சுருங்கச் செய்கிறது. சுருங்காது மிதியாக இருக்கும் பகுதிகளை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி விடலாம் என டாக்டர் அந்தனி எண்ணினார்.

தெடி 15 வயதாக இருக்கும் போது முழங்காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டது அதன் பின்பு தான் இக்கட்டிகள் வளர ஆரம்பித்தன. “அவை வளரும் வேகத்தைப் பார்த்து, கட்டிகள் எனது முகத்தை மூடி வளர்ந்து விடுமோ என நான் பயந்து போனேன்' என்கிறார் தெடி. இந்த நோய் காரணமாக தெடி தனது, தொழில் மட்டு மல்ல மனைவியையும் இழந்தார்.

அவரது கட்டிகள் வருடாந்தம் 5 செ. மீ வீதம் வளர்ந்தன. கைகள் ழுவதும் கணுக்களாக வளர்ந்து அவரது தனது பிள்ளைகளைக் கூட அரவணைக்க முடியாது தவித்தார். இந்த நிலைமையில் நான் எனது இரண்டு பிள்ளைகளையும் பராமரிக்க முடியாது ஏங்கினேன். எனது மனைவியும் பிரிந்து போய் விட்டார்.

அதிர்ஷ்டவசமாக எனது சகோதரி எனது பிள்ளைகளைக் கவனித்தார். தனது பிணியின் காரணமாக மீன் பிடித் தொழிலைக் கைவிட்ட அவர், பாதையோரத்தில் பிச்சையெடுத்து உண்ணும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். மேலும் வீதியால் போகிறவர்களின் பழிச் சொல்லுக்கும் இலக்கானார்.

பிச்சைக்காரனாக வாழ்க்கை நடத்துவதை விட “விநோதப் பிறவி' காட்சியில் பங்குபற்றுவது மேல் என எண்ணி தெடி தற்போது “விநோதப் பிறவிக் காட்சிகளில் தோன்றி உழைக்க ஆரம்பித்தார். டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “அரை மணிதன் அரை மரம்' காட்சிக்காக நடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் டாக்டர் அந்தனியை அவர் சந்தித்தார். டாக்டர் அந்தனி அவருக்கு பெரும் நம்பிக்கை அளித்திருக்கின்றார்.

“இதில் விநோதமான அம்சமும் உண்டு கவலையான விசயமும் உண்டு. இந்த உடல் கட்டிகள், பிறருக்கு தொற்று அடையலாம் என்பதை முற்றாக நிராகக்க முடியாது என்கிறார் டாக்டர் அந்தனி. நவீன மருத்துவ முன்னேற்றம் தெடிக்கு பெரு நம்பிக்கையளித்திருக்கின்றது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல