ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுக்கும் (58), அந்நாட்டு முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபயேவாவுக்கும் (27) தொடர்பு இருப்பதாக 2008 முதல் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு, புடின் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தார். புடினுக்கு லுட் மிலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
முதன் முதலில் இச்செய்தியை அந்நாட்டின் பணக்காரர் அலெக்சாண்டர் லெபதேவ் தனது பத்திரிக்கையில் வெளியிட்டார். இச்செய்தி உண் மையானது என்று கூறி இருந்தார். திடீரென இச்செய்தி வெளியிட்டதை தொடர்ந்து லாபகரமாக இல்லை என்ற காரணம் காட்டி இப்பத் திரிக்கை மூடப்பட்டது. ஆனால், புடினை திருப்திபடுத்தவே இப்பத்திரிக்கை மூடப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்நிலையில், ஏற்கனவே புடினுடன் பிரச்னையை ஏற்படுத்தி கொண்ட ‘வோக்’ இதழின் புதிய எடிட்டர் விக்டோரியா டாவிடோவா, 2011, ஜனவரி இதழில் புடினின் காதலி அலினாவின் போட்டோவை வெளியிட தீர்மானித்துள்ளார். இந்த போட்டோவுக்கு தங்கத்தால் ஆன ஆடையை அணிந்து, இடுப்பில் கை வைத்து அலினா ‘போஸ்’ கொடுத்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக