சனி, 18 டிசம்பர், 2010

அமெரிக்காவுக்கு போட்டியாக கியூபா இணையத்தளம்

அமெரிக்காவின் ‘விக்கிபீடியா’ தகவல் களஞ்சியத்தைப் போல, கியூபா அரசும் சொந்தமாக ஒரு தகவல் களஞ்சிய இணையத்தளத்தைத் துவங்கியுள்ளது. நேற்று முதல் இந்த இணையத்தளம் அதிகாரபூர்வமாகச் செயல்படத் துவங்கியுள்ளது. ‘விக்கிபீடியா’ என்ற தகவல் களஞ்சிய இணையத்தளம், 2001ல் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இலவசமாகத் தகவல்களைத் தரும், இந்த இணையத்தளத்தின் சிறப்பு, வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை அதில் பதிவு செய்ய முடியும், திருத்த முடியும்.

தற்போது அதில், 35 லட்சம் தலைப்புகள் ஆங்கிலத்திலும், ஆறு லட்சத்து 82 ஆயிரம் தலைப்புகள் ஸ்பானிஷ் மொழியிலும் உள்ளன. அமெரிக்காவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற கியூபா அரசு, தற்போது ‘விக்கிபீடியா’வுக்குப் போட்டியாக, சொந்தமாக "எகுரெட்" என்ற தகவல் களஞ்சிய இணையத்தளத்தைத் துவங்கியுள்ளது.

இதை இயக்குபவர் யார் என்பது தெரியவில்லை. ஸ்பானிஷ் மொழியில் செயல்படும் இந்த இணையதளம் அதிகாரபூர்வமாக, இவ்வாரம் முதல் செயல்படத் துவங்கியது. எனினும் 20 ஆயிரம் தலைப்புகளில் ஏற்கனவே இது செயல்படத் துவங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல