இதற்காக 44 பக்கங்கள் கொண்ட விதிமுறை புத்தகங்களை ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறது. உடம்பை இறுக்கி பிடித்துக் கொள்ளும் படியாகவும் பின்புறத்தை எடுப்பாக காட்டும்படியாகவும் உள்ள ஸ்கர்ட் அணியவும் கண்களை உறுத்தும் வகையில் நகைகள் அணியவும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்த ஆடையாக இருந்தாலும் தொள தொளப்பான ஆடைகளையே ஆண்கள், பெண்கள் இருவரும் அணிய வேண்டும். அதுபோல, உடலின் தோல் நிறத்திலேயே உள்ளாடைகள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளை நிற சட்டை போன்றவற்றை அணியும் போது, உள்ளே அணிந்திருக்கும் அடர் வண்ண நிற உள்ளாடைகள் `பளிச்' என தெரியக் கூடாது என்பதற்காகவே இந்த கண்டிப்பு. இதுபோன்று, ஏராளமான விதிமுறைகள் அதில் இடம் பெற்றுள்ளன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக