சனி, 18 டிசம்பர், 2010

பஸ்சில் புகுந்து மாணவர்களை குத்திய வாலிபர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள டோரிட் என்ற இடத்தில் இருந்து நேற்று காலையில் ஒரு பள்ளிக்கூட பஸ் புறப்பட்டது. அப்போது, அதன் பின்வாசல் வழியாக 27 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மநபர் ஏறினார். பஸ்சுக்குள் இருந்த மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தத் தொடங்கினான். இதனால், மாணவர்கள் அலறினார்கள். கத்தி குத்தில், உயர்நிலை வகுப்பு படிக்கும் 7 மாணவர்களும் தொடக்கக் கல்வி படிக்கும் 4 மாணவர்களும் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, அருகில் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றில் அந்த வாலிபர் ஏறினான். அங்கும் சென்று பயணிகளை சரமாரியாக குத்தத் தொடங்கினான். அந்த பஸ்சில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, மற்ற பயணிகள் ஒன்று சேர்ந்த அவனை அடித்து உதைத்து பிடித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில், `அவன் வேலையில்லாதவன் என்றும் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காகவே இத்தகைய நிலைக்கு அவன் வந்தான்' என்றும் தெரிய வந்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல