வியாழன், 17 பிப்ரவரி, 2011

54 வருடங்களுக்கு பின்னர் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற தாய்

இரண்டு வருட தீவிர விசாரணைக்கு பின்னர் தான் பெற்ற குழந்தைகளை கொன்ற தாய்க்கு 54 ஆண்டுகள் கழித்து சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ரூபி குளோகோவ் (74).

இவர் மதுவுக்கு அடிமையானவர். இவரின் மகன் ஜேம்ஸ் (55). இவர் தன்னுடைய தாயாரின் நடவடிக்கை குறித்து சந்தேகமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த சிபாய்கான் நகர பொலிஸில் புகார் செய்தார். மேலும் 1957ம் ஆண்டு தன்னுடன் பிறந்த ஜியானீன் என்ற சகோதரியின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து அப்பகுதி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக ஜியானீன் கல்லறை தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் குழந்தையான ஜியானீன் மரத்தால் ஆன கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

மேலும் மற்றொரு குழந்தையான ஸ்கொட் என்பவரையும் 64ம் ஆண்டு கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஜேம்ஸ் மற்றும் ஜியானீன் இருவரும் குழந்தையாக இருந்த சமயத்தில் ஒன்று சேர அழுதனர். அவர்களை பயமுறுத்துவதற்காக சோபாவில் தள்ளியபோது ஜியானீன் இறந்துவிட்டார். அவள் விபத்தில் இறந்துவிட்டதாக வழக்கு முடிக்கப்பட்டது என தெரிவித்தார். இதனையடுத்து சிபாய்கான் நகர நீதிபதி குளோகோவிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல