வியாழன், 17 பிப்ரவரி, 2011

காதலனை சந்திக்கும் முயற்சி மரணத்தில் முடிந்த அவலம்

தனது ஆருயிர் காதலனை சந்திப்பதற்காக 8 ஆம் மாடியிலுள்ள குடியிருப்பொன்றிலிருந்து துவாய்கள் மற்றும் ஒரு படுக்கை விரிப்பு என்பவற்றை இணை த்து கட்டி கீழ் தளமொன்றிலுள்ள வரவேற்பு பகுதிக்குள் தரையிறங்க முயற்சித்த இந்தோனேசிய பணிப்பெண் ஒருவர், கை நழுவி தரையில் விழுந்து பதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.

பாயா தெருபோன் எனும் இடத்திலுள்ள மாடிக்குடியிருப்பொன்றின் 8 ஆம் மாடியிலுள்ள வீட்டில் மேற்படி 33 வயது பணிப்பெண் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினம் அப்பணிப் பெண்ணின் காதலர் மேற்படி மாடியின் வரவேற்பு தளத்தில் காத்திருப்பதாக அவரின் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தி யொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்குமாறு மேற்படி பணிப்பெண் தனது எஜமானியிடம் கோரியுள்ளார்.

ஆனால் எஜமானியோ நள்ளிரவு தாண்டிய வேளையில் பணிப்பெண் வீட்டை விட்டு செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

தனது கோரிக்கை நிராகக்கப்பட்டதால் கவலையுடன் தனது அறைக்கு திரும்பிய பணிப்பெண், துவாய்கள் மற்றும் படுக்கை விரிப்பு என்பவற்றை ஒன்றுடனொன்று கட்டி அதனை கயிறாக பற்றிப் பிடித்து கீழ் தளத்திலுள்ள வரவேற்பறையில் இறங்க முயற்சித்துள்ளார்.

அவரது பாரத்தை தாங்காது துவாய்களுக்கிடையிலான முடிச்சு அவிழ்ந்ததால் பணிப்பெண் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அப்பணிப் பெண்ணின் காதலரும் இந்தோனேசிய நாட்டவராவார். அவருக்கும் பணிப்பெண்ணுக்குமிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கையடக்கத் தொலைபேசி குறுஞ் செய்திகள் இந்த வழக்கில் முக்கிய சான்றுகளாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல