வியாழன், 17 பிப்ரவரி, 2011

டெங்குக் காய்ச்சல் மாணவன் மரணம்

டெங்குக் காய்ச்சல் காரணமாக அல்வாய் வடக்கில் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த தர்ம ரட்ணம் துஷாந் (வயது 18) என்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மாணவனே உயிரி ழந்தவர் ஆவார்.

நேற்று முன்தினம் மாலை தனியார் கல்விநிலையத்திற்குச் சென்றவேளை மயங்கி விழுந்த பிரஸ்தாப மாணவனை பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை க்காக யாழ்.போதனா வைத்தியசா லைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பயனளி க்காததால் துஷாந் நேற்றுக் காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இம் மாணவன் டெங்குக் காய்ச்சலிலேயே உயிரிழந்தார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல