மாதிரிப்படம்
பெண்கள் கூட்டத்தின் மத்தியில் இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி நிர்வாணமாகத் தோன்றும் புகைப்படங்கள் ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் விலைக்கு இத்தாலிய சஞ்சிகைகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இத்தாலியின் முன்னணிப் புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான பப்ஸியோ கொரோனாவை மேற்கோள்காட்டி பித்தானிய “டெயிலி மெயில்' பத்திரிகை மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது.
வயது குறைந்த விலைமாதுகளுடன் கட்டணம் செலுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாக பெர்லுஸ்கொனி (74 வயது) குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையிலேயே அவரது நிர்வாண புகைப்படங்கள் சஞ்சிகைகளுக்கு விற்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டப்பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பெர்லுஸ்கொனியின் தனிப்பட்ட வசிப்பிடங்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட அதனை வாங்கிய சஞ்சிகைகள் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்தப் புகைப்படங்கள் விற்கப்பட்டமை குறித்து பெர்லுஸ்கொனியின் சட்டத்தரணிகள் குழுவைச் சேர்ந்த நிக்கொலோ கெடினி மற்றும் போலோ லோங் கோ ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ““இவ்வாறான புகைப்படங்கள் விற்கப்பட்டிருக்குமானால் அவை போலியாக தயாரிக் கப்பட்டவையாகும்'' என்று தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் மேற்படி புகைப்படங்களைத் தேடி மிலான் நகரிலுள்ள தனது அலுவலகம் இனந் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக கொரோனா தெரிவித்தார்.
““எனது அலுவலகம் உடைக்கப்பட்டவேளை அங்கு பெருமளவு பணமும் புகைப்படக்கருவிகளும் இருந்தன. ஆனால் எனது அலுவலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்தவர்கள், அவற்றை அலட்சியம் செய்து இறுவட்டுக்களையும் புகைப்படத் தொகுப்புக்களையும் களவாடிச் சென்றுள்ளனர்'' என அவர் கூறினார்.
எனினும் எம்மிடம் பெர்லுஸ்கொனியின் புகைப்படங்கள் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இத்தாலியில் விபசாரம் சட்டவிரோதமானதல்ல. ஆனால் வயது குறைந்த (18 வயதிலும் குறைவான) விலைமாதுக்களுடன் கட்டணம் செலுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது 3 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதேசமயம் அதிகார பதவியிலுள்ள ஒருவர் இக்குற்றதை மேற்கொள்ளும் பட்சத்தில், அவர் 12 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக