இந்திய குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் பெருமைமிகு பத்ம விபூஷண் விருது பெற்றவர்களின் பட்டியலில் பிரபல நாட்டிய கலைஞர் கபிலா வாத்சாயனின் (82) பெயரும் இடம்பெற்றிருந்தது. நாட்டிய துறைக்காக இவர் ஆற்றியுள்ள பணிகளை கெளரவிக்கும் வகையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
கபிலா வாத்சாயன், நாட்டியதுறையில் மட்டுமல்லாமல், கலை, கல்வி உட்பட பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் பன்முகத்தன்மை உடையவர். எழுத்தாளர், இசைக் கலைஞர், கல்வியாளர், பேச்சாளர் என, பல முகங்கள் இவருக்கு உண்டு. ராஜ்யசபா எம்.பி. யாகவும் இவர் உள்ளார். தன் பள்ளி பருவத்தில், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோரிடம் நடன பயிற்சி பெற்றார்.
இந்திய நடன வட்டாரத்தில் கபிலா வாத்சாயனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவருக்கு 10 வயதாக இருக்கும்போது, ஆச்சான் மகாராஜ், இவரது நாட்டியத் திறமையை அடையாளம் கண்டுகொண்டார். அப்போது அவர் கபிலாவிடம் கூறுகையில், ‘உனக்கு நன்றாக நடனம் ஆடத் தெரிகிறது.
ஆனால், முறையான பயிற்சி பெற்றால், பிரபலமாகலாம்’ என்றார். இதையடுத்து முறையாக நாட்டிய பயிற்சி பெற்று, பரத நாட்டியம் உள்ளிட்ட நடனங்களில் சிறந்து விளங்கினார். மணிப்புரிலிருந்து பிரபல நடன கலைஞர் குரா அம்பி சிங்கை டில்லிக்கு வரவழைத்து, அவரிடம் மணிப்புரி நடனத்தையும் கற்றுக்கொண்டார். டில்லியில் நடன பயிற்சி பள்ளியையும் தொடக்கினார்.
நடனத்தில் மட்டுமல்லாது, கல்வியிலும், சிறந்து விளங்கினார். அமெரிக்காவின் மிச்சிகனுக்கு சென்று கல்வி பயின்றார். இதன்பின், இந்தியா திரும்பி, பனாரஸ் இந்து பல்கலையில் கலாநிதி பட்டம் பெற்றார். ‘நாட்டிய சாஸ்திரா என்பது உட்பட, ஏராளமான நூல்களையும் எழுதினார். டில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய கலை பயிற்சி மையத்தின் நிறுவனர்.
இயக்குனராகவும், மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலராகவும் பணியாற்றினார். இவரது பதவிக் காலத்தில் ஏராளமான உயர் கல்வி மையங்கள் நாட்டில் அமைக்கப்பட்டன. சங்கீத நாடக அகடமி விருதையும், நடன ஆராய்ச்சி துறைக்கான விருதையும் பெற்றார். தற்போது இவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பத்ம விபூஷண் விருதையும் இவருக்கு அளித்து கெளரவித்துள்ளது இந்திய மத்திய அரசு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக