வியாழன், 17 பிப்ரவரி, 2011

சவர்க்காரம் மற்றும் சலவைத் தூள் என்பவற்றை உண்ணும் பழக்கத்திற்கு அடிமையான யுவதி (படங்கள் இணைப்பு)

மனிதர்களில் இருந்து வித்தியாசமாக ஒரு பெண்மணி சவர்க்காரத்தை பிரதான ஆகாரமாக உண்கிறார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் என்ற 19 வயது பெண்ணே இந்த விசித்திரப் பழக்கத்தை உடையவர்.

காலை எழுந்தவுடன் சவர்க்காரத்தை சாப்பிட்டு தண்ணீருக்கு பதிலாக சலவைத் தூளை அருந்தி வருகிறார். சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் ஆகியன மிகவும் காரமான உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள் என்பது நாம் அறிந்ததே. இவ்வாறிருந்தும் தொடர்ச்சியாக இப் பெண் இவ்வாறு சாப்பிட்டு வருகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

சிறு வயது முதல் சலவைத் தூள் மணத்தை நுகர்வது தனக்கு பிடிக்கும் என்கிறார். சிறு பிள்ளையாக இருக்கும்போது ஒரு தடவை தற்செயலாக சலவைத் தூள் விரலில் பட்டது. அதனை நக்கிப் பார்த்த போது உப்புத் தன்மையோடு மிகவும் சுவையாகவும் இருந்தது என்கிறார்.

இச் செயற்பாடு உடலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டும் பழக்கத்தை தன்னால் விட முடியவில்லை என டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் கூறுகிறார். சவர்க்காரங்களை விரும்பி உண்ணுவதில் அலாதியான சந்தோசம் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்.

தாயாருடன் டெம்பஸ்ட் ஹென்டர்ஸன்

சிறுவயதில் டெம்பஸ்ட் ஹென்டர்ஸன்



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல