வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஆண் நண்பர் இல்லை; இங்கிலாந்து அழகி ஏக்கம்

இங்கிலாந்து நாட்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர், ஜெசிகா லைன்லி. சட்ட மாணவியான இவர், ஆறு மாதங்களுக்கு முன் `மிஸ் இங்கிலாந்து' பட்டம் பெற்றார். ஆனால், இதுவரை ஒரு ஆண் நண்பர் கூட தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 5 அடி 11 அங்குலம் உயரத்துடன் ஆண்களை கவரும் வகையில் இருக்கும் இந்த 21 வயது அழகியை யாரும் காதலிக்கவும் இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துளிர்விட்ட ஒரு காதலும் முறிந்து போனது. இதனால், `இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு வாழ்த்து அட்டைகள் அதிக அளவில் எனக்கு வந்து குவியாது' என வருந்துகிறார், ஜெசிகா. தனது தயார் ரோஸ்மேரியிடம் இருந்து ஒரேயொரு வாழ்த்து அட்டை மட்டும் காதலர் தினத்தன்று தனக்கு வரும் என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல