புதன், 2 பிப்ரவரி, 2011

மனிதர்களைப் போன்று இறந்த குட்டிகளுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் மனிதக் குரங்குகள்

மனிதக் குரங்குகள் தமது குட்டிகள் இறக்கும்போது மனிதர்களைப் போன்று துக்கம் அனுஷ்டிப்பது சர்வதேச விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவினரின் புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க கொன்ஸாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் மார்க் பொட்டாமருடன் இணைந்து மக்ஸ் பிளாங் சைக்கோலிங் குயிஸ்டிக்ஸ் நிறுவக விஞ்ஞானிகளான கலாநிதி கத்தன் குரோனின் மற்றும் எட்வின் வான் லியூவென் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

16 மாத வயதான குரங்குக் குட்டியொன்று இறந்ததையடுத்து எவ்வாறு மனிதக் குரங்குகள் துக்கம் அனுஷ்டிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் படமாக்கியுள்ளனர்.

தாய் மனிதக் குரங்கானது தனது குட்டிகளை இரண்டு வயது வரை தன்னுடன் தூக்கிச் செல்வதுடன் அவற்றுக்கு ஆறு வயதாகும் வரை அவற்றை பராமரிக்கின்றன.

குட்டியொன்று இறந்ததும் தாய் மனிதக் குரங்கு 24 மணி நேரத்துக்கு மேற்பட்ட காலத்திற்கு அதனது உடலை தூக்கிச் செல்கிறது.

பின்னர் குட்டியை தரையில் வைக்கும் தாய்க் குரங்கு, குட்டி இறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் முகமாக அதன் முகம், கழுத்து என்பவற்றை தனது விரல்களால் தொட்டுப் பார்க்கிறது. அதுமட்டுமல்லாது குட்டி உயிரிழந்துள்ளது தொடர்பில் ஏனைய மனிதக் குரங்குகளது அபிப்பிராயத்தையும் தாய்க் குரங்கு அறிய முயற்சி எடுத்துக்கொள்கிறது.

இந்நிலையில் இறந்த குரங்குக் குட்டிக்கு அஞ்சலி செலுத்தும் தாய்க் குரங்கும் ஏனைய குரங்குகளும், மறுநாள் அதன் உடலை கைவிட்டுச் செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல