புதன், 2 பிப்ரவரி, 2011

ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் போதைவஸ்து கடத்திய குற்றச் சாட்டில் நெதர்லாந்து - ஈரான் பெண்ணொருவருக்கு சனிக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து நெதர்லாந்தானது ஈரானுடனான அனைத்து உறவுகளையும் ஞாயிற்றுக்கிழமை முடக்கியுள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து நெதர்லாந்து வெளிநாட்டு அமைச்சர் உரி ரொஸென்தல் திங்கட்கிழமை கலந்துரையாடினார்.

போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் நெதர்லாந்து ஈரான் பிரஜையான ஸாஹ்ரா பஹ்ராமிக்கு சனிக்கிழமை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஆதரவு “பார்ஸ்' செய்தி முகவர் நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸாஹ்ரா பஹ்ராமிக்கு சர்வதேச ரீதியான எதிர்ப்பையும் மீறி மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

இரு தடவைகள் போதைப்பொருளை ஈரானுக்கு கடத்தி வந்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஸாஹ் ரா பஹ்ராமிக்கு தூக்குத் தண்டனைக்கு மேலதிகமாக 70 கசையடி தண்டனை மற்றும் 1400 அமெரிக்க டொலர் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் 450 கிராம் கொக்கேயினும் 420 கிராம் ஓபியமும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக அவர் 150 கிராம் கொக்கேயினை விநியோகித்ததாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல