புதன், 2 பிப்ரவரி, 2011

சட்டத்தை மீறச்சொல்லும் பிரதமர்

தொலைக்காட்சி அனுமதிப் பத்திர கட்டணங்களை இத்தாலியர்கள் செலுத்தக் கூடாது

இத்தாலியர்கள் தமது தொலைக்காட்சி அனுமதிப் பத்திரங்களுக்கான கட்டணங்களை செலுத்தாது சட்டத்தை மீறும் வகையில் செயற்பட அந்நாட்டு பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பெர்லுஸ்கொனிக்கு எதிராக அரசாங்க “ஆர்.ஏ.ஐ.“ தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத் தியுள்ளார்.

74 வயதான பெர்லுஸ்கொனி 17 வயதுடைய விலைமாதுக்களுடன் கட்டணம் செலுத்தி பாலியலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில், அதற்கு தூபம் போடுவது போல் அரச தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவது பெர்லுஸ்கொனிக்கு பாரிய தலையிடியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வார ஆரம்பத்தில் பெர்லுஸ்கொனிக்கு சொந்தமற்ற ஊடகங்களில் அவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்கள் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தொலைக்காட்சி நேரடி விவாத நிகழ்ச்சியின் போது தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்திய பெர்லுஸ்கொனி நிகழ்ச்சித் தயாப்பாளர் மீது வசை மாரி பொழிந்து பார்வையாளர்களை அதிரவைத்தார்.

கமா எல் மஹ்ரோக் மற்றும் ஐஸ் பெரார்டி ஆகிய 17 வயது யுவதிகளுடன் கட்டணம் செலுத்தி பாலியலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பெர்லுஸ்கொனி மறுப்புத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ரோமிலுள்ள ஹோட்டலில் இடம்பெற்ற தனது கட்சியைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினரின் பிறந்த நாள் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பெர்லுஸ்கொனி தனக்கு எதிரான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேவைகள் குறித்து குறிப்பிடுகையில், “இது ஒரு சர்வாதிகாரம். இத்தாலியர்கள் தொலைக்காட்சி சேவைக்கான அனுமதிப்பத்திர கட்டணத்தை செலுத்தக்கூடாது.
ஏனெனில் இத்தாலியர்களில் பெரும் பான்மையானோர் பெர்லுஸ்கொனியான எனக்கே வாக்களித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் (தொலைக்காட்சி நிறுவனங்கள்) பொதுசேவையை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒன்றை பார்க்க மக்களை நிர்ப்பந்திக்கின்றனர். இது வெட்கக் கேடானதாகும்'' என்று தெரிவித்தார்.

கோடீஸ்வரரான பெர்லுஸ்கொனி தனக்கு சொந்தமான பல தொலைக்காட்சி சேவைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் மிலான் நகரிலுள்ள பெர்லுஸ்கொனியின் அலுவலகங்களில் தேடுதல் நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி விசாரணையாளர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்குவதா இல்லையா என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களே விவாதித்து வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென பாராளுமன்றத்தின் குழுவொன்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற கீழ் சபையில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள பெர்லுஸ்கொனி, மேற்படி வாக்கெடுப்பில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல