புதன், 2 பிப்ரவரி, 2011

ஆபாச “வீடியோ' படங்களை தயாரித்த இந்தோனேசிய பொப் இசைப் பாடகருக்கு சிறை

தென் கிழக்கு ஆசியாவின் மிகச்சிறந்த பொப் இசைப் பாடகர்களில் ஒருவராக பிரபலம் பெற்று விளங்கும் நஸ்றில் இர்ஹாமுக்கு பாலியல் வீடியோ படங்களை தயாரித்து இணையத்தளத்தின் மூலம் விநியோகித்த குற்றச்சாட்டில் மூன்றரை வருட சிறைத் தண்டனை விதித்து இந்தோனேசிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி பாலியல் வீடியோ படங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் கடந்த வருடம் நஸ்ரில் இர்ஹாமுடன் மேலும் இரு பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த ஆபாச படங்கள் தயாரிப்பதற்கு எதிரான கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனை விதிப்புக்கு உள்ளாகிய முதலாவது பிரபலமாக நஸ்றில் இர்ஹாம் விளங்குகிறார்.

ஆபாச பாலியல் வீடியோ படங்களை தயாரித்ததை ஒப்புக் கொண்ட நஸ்றில் இர்ஹாம், அவற்றை விநியோகித்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மேற்படி “வீடியோ' படங்கள் தன்னிடமிருந்து திருடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் மூடிய கதவுக்கு பின்னால் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்துக்கு வெளியே நஸ்றில் இர்ஹாமின் ஆதரவாளர்கள் 500 பேர்வரை கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நஸ்றில் இர்ஹாம் தனது காதலியும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான லூனா மாயாவுடனேயே நீதிமன்றத்தில் ஆஜராகி யிருந்தார்.

அவரால் தயாரிக்கப்பட்ட இரு ஆபாச வீடியோ படங்களில் ஒரு படத்தில் லூனா நடித்திருந்ததாக கூறப்படுகிறது.

மற்றைய ஆபாச படத்தில் விளம்பர நடிகையான கட் தாரி தோன்றியிருந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல