புதன், 2 பிப்ரவரி, 2011

பிரேசிலின் பின்தங்கிய வனப் பிராந்தியத்தில் வெளியுலக தொடர்பின்றி வாழும் இனம் (படங்கள் இணைப்பு)

பிரேசிலின் பின்தங்கிய வனப் பிராந்தியமொன்றில் வெளியுலக தொடர்பின்றி வாழ்வதாக கருதப்படும் செவ்விந்திய இன மொன்றின் புதிய புகைப்படங் கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரேசிலில் பெரு எல்லைப் பிராந்தியத்தில் வாழும் மேற்படி இனம் ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன்பும் புகைப்படமெடுக்கப்பட்ட போது, அந்த இனம் உலக வாழ்க்கையில் முழுமையாக தனிமைப்படுத் தப்பட்ட இனமாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் புதிய புகைப்படங்கள் மூலம் கத்தி மற்றும் சட்டி உட்பட உலோகத்தாலான பொருட்களை மேற்படி இனம் பயன்படுத்தி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 50 பேருக்கும் 100 பேருக்கும் இடையிலான சனத்தொகையைக் கொண்டுள்ள மேற்படி வனப்பிராந்தியத்திலுள்ளவர்கள், முற்றுமுழுதாக வெளியுலக தொடர்புகள் அற்றிருக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பிராந்தியத்தில் வாழும் பலர் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல