புதன், 2 பிப்ரவரி, 2011

ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்..! (காணொளி இணைப்பு)

பெண்ணொருவரை தனது மடியில் வைத்து பஸ்ஸை செலுத்திய அமெரிக்காவின் மிச்சிகன் மாநில டெட்ரொயிட் நகர சாரதியொருவர் 30 நாட்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

திமோத்தி கார்பெண்டர் என்ற சாரதியே இத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் பேருந்தை செலுத்தும் போது பெண் ஒருவரை தனது மடியில் உட்காரவைத்தது மட்டுமன்றி சில்மிஷங்களில் ஈடுபடும் காட்சியானது அப்பஸ்ஸில் பயணித்த பயணியொருவரால் படமாக்கப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கையானது சட்ட ரீதியாக குற்றமெனவும் போக்குவரத்து விதிகளை மீறும் நடவடிக்கையெனவும் டெட்ரொயிட் நகர போக்குவரத்துப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பணி நிறுத்தம் பெற்றுள்ள அச் சாரதியை பணியில் இருந்து நிரந்தரமாக இடைநிறுத்தவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல