புதன், 2 பிப்ரவரி, 2011

அலுவலக பணியின்போது ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக சிறுவனை படுகொலை செய்த நிறைவேற்றதிகாரி

அலுவலக வேலையின்போது ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக 10 வயது சிறுவன் ஒருவனைக் கடத்திச் சென்று படுகொலை செய்த முன்னணி தொலைபேசி நிறுவன மொன்றின் நிறைவேற்றதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியின் தனிநபர் இரகசியங்களை பாதுகாக்கும் சட்டங்களின் பிரகாரம் படுகொலை செய்த மேற்படி 45 வயது நிறை வேற்றதிகாரி ஒலோப் எச் என சுருக்கமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சம்பவதினம் பொன் நகருக்கு அண்மையிலுள்ள தனது அலுவலகத்துக்கு பணிக்காக சென்ற ஒலோப், தனது மனைவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் மிகவும் கவலையாக இருப்பதாகவும் அன்றைய தினம் வீடு திரும்ப தாமதமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னரே அவர் இந்த படுகொலையை செய்துள்ளார்.

““அன்று எனது அலுவலக வேலையால் நான் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தேன். எனது மேலதிகாரி அன்றைய தினத்தை மிகவும் மோசமான ஒன்றாக மாற்றியிருந்தார். இந்நிலையில் ஒரு குழந்தையை கொல்ல வேண்டும் என்ற தீவிர எண்ணம் ஏற்பட்டது'' என பொலிஸாரிடம் தெரிவித்த ஒலோப், ““நான் குழந்தையொன்றைத் தேடி இலக்கின்றி காரை செலுத்திச் சென்றேன். எவரிடமாவது எனது அதிகாரத்தை பிரயோகிக்க நான் விரும்பினேன். சிறுவனா, சிறுமியா என்பது தொடர்பில் நான் கவலைப்படவில்லை. என் மன அழுத்தத்திற்கு நிவாரணமாக ஒருவர் தேவைப்பட்டார்'' என்று கூறினார். வழியில் சைக்கிளில் சென்ற மிர்கோ என்ற சிறுவனை ஒலோப் சந்திக்க நேரிட்டது.
இந்நிலையில் சிறுவனை சாதுர்யமாக பேசி காரில் ஏற்றிய ஒலோப், அவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கழுத்தை திருகி படுகொலை செய்துள்ளார்.
அதன் பின் அவர் சிறுவனின் உடலை பெல்ஜிய எல்லைக்கு அண்மையிலுள்ள கிரேபாத் எனும் இடத்தில் கைவிட்டு சென்றுள்ளார்.
இந்த படுகொலைக்குப் பின்னர் மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட ஒலோப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றதுடன் 150 பணியாளர்களைக் கொண்ட திணைக்களத்துக்கு பொறுப்பாக நியமனம் பெற்றார். பொலிஸாரின் தீவிர விசாரணை களையடுத்து இந்த சம்பவம் நடைபெற்று 6 மாதங்களின் பின்னர் ஒலோப் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல