புதன், 2 பிப்ரவரி, 2011

இந்தி திரைப்படங்களில் நடிக்க உலக அழகி ஆர்வம்

இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக பிரபஞ்ச அழகியாக தேர்வான மெக்சிகோவை சேர்ந்த ஜிமெனா நவரெத்தே தெரிவித்தார்.இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட மெக்சிகோவை சேர்ந்த ஜிமெனா நவரெத்தே இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதன் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள அவர் பெண் குழந்தைகள் பற்றிய விழிபுணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டார். பல்கலைக்கழக மாணவர்களுடன் மரதன் ஓட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார்.

இந்தியாவுக்கு முதன் முறையாக அவர் வந்த போதிலும் இந்தி நடிகர் சல்மான்கானை ஏற்கனவே சந்தித்து இருக்கிறார். அப்போது அவருடன் இணைந்து நடிக்க ஜிமெனா விருப்பம் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் ‘இந்தி திரைப்படங்களில் நடிக்க மிக ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார். இது குறித்து பேட்டியளித்த பிரபஞ்ச அழகி ஜிமெனா கூறியதாவது

இது என்னுடைய முதல் இந்தியப் பயணம். பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை பெற்றவர் என்ற அடிப்படையில் பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக கடமை எனக்கு இருக்கிறது. இந்தியா மிகவும் அழகான நாடு கலாசார செழுமை மிக்க நாடு மெக்சிகோவை போலவே இந்தியாவிலும் மசாலா உணவுகள் பிரசித்தம் எனவே எனது வீட்டில் இருப்பது போலவே உணருகிறேன்.

இந்தி திரைப்படங்களில் நடிக்குமாறு இதுவரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எனினும் இந்தி திரைப்படங்களில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இந்தியாவை சேர்ந்த நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் அழகானவர்கள் எனக்கு இந்தியில் ‘நமஸ்தே’ என்ற வார்த்தை மட்டுமே தெரியும் ஆனாலும் இந்தி கற்க விரும்புகிறேன் என நவரத்தே தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல