விடுதலைப் புலிகளின் அரசியல் துறைசார்ந்த செயற்பாடுகள் முன்னணியில் உள்ளதா அல்லது கடற்புலிகளின் அரசியல் துறைசார்ந்த செயற்பாடுகள் முன்னணியில் உள்ளதா? என்ற ஒரு போட்டி யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் ஆளுகையின் கீழ் இருந்த அனைத்துப் பகுதிகளிலும் இருந்தது. யாழ் மாவட்டத்தில் இந்தப் போட்டி கூடுதலாக நிலவிவந்தது.
யாழ்ப்பாணத்தில் கரையோரப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் அல்லது விடுதலைப்புலிகள் சார்ந்த செய்திகள் முன்னணியில் அல்லது முந்திக்கொண்டு ஊடகங்களில் வெளிவந்தமை அரசியல் துறையினரை எரிச்சலடையச் செய்தது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் நடந்த அல்லது நடக்கின்ற சம்பவங்கள் ஐ.பி.சி வானொலியில் அதிகாலை வேளையில் முக்கியத்துவம் மிக்க செய்திகளாக வெளிவந்தமை யாழ் மாவட்ட அரசியல் துறையினரிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக ஏற்கனவே யாழ் மாவட்ட ஐ.பி.சி செய்தியாளருக்கும் கடற்புலிகளின் தளபதி சூசைக்கும் இடையே இருந்த நெருக்கத்தின் விளைவாக இச்செய்திகள் கூடுதலாக மிகைப்படுத்தப்பட்டு வருகின்றன என்ற ஒரு முறைப்பாடு யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் இளம்பரிதியால் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனிடம் முன்வைக்கப்படுகிறது. இந்த யோசனையை செவிமடுத்த தமிழ்ச்செல்வன் ஐ.பி.சி முழுமையாக கஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவ்விடயத்தில் தான் கூடுதல் செல்வாக்கு செலுத்த முடியாதெனவும் நீங்கள் கஸ்ரோவின் ஆட்களைப் பிடித்து அதற்குரிய ஒழுங்குகளை செய்யுங்கள் ஆனால் ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அவதானமாக இவ்விடயத்தை கையாளுங்கள் என்ற உத்தரவு இளம்பரிதிக்கு பிறப்பிக்கப்பட்டதுடன் உங்களது நடவடிக்கைகள் காரணமாக சூசையிடமிருந்தோ அல்லது ஐ.பி.சி யாழ்ப்பாணச் செய்தியாளரிடமிருந்தோ எனக்கொரு முறைப்பாடும் வரக்கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து எப்படியாவது கடற்புலிகளின் அரசியல் துறைக்குப் போட்டியாக ஒரு செய்தியாளரை களமிறக்க வேண்டும் என்று முடிவுகட்டிய இளம்பரிதி ஆனந்தசங்கரியுடன் நெருக்கமாக இருந்த அந்த கிராம அலுவலராகிய ஊடகவியலாளரை தனது வலைக்குள் வீழ்த்தி தங்களது அரசியல் துறையால் முன்னெடுக்கப்படுகின்ற சிறிய நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் காலைவேளையில் குறித்த ஐ.பி.சி வானொலியில் ஒலிபரப்புவதற்குரிய ஏற்பாட்டினை இளம்பரிதி செய்து முடித்தார்.
முன்னர் நந்தவனத்தில் கடமையாற்றிய விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவின் தவச்செல்வன் என்ற போராளியே குறித்த வலிகாமம் செய்தியாளரின் நியமனத்திற்குரிய ஒழுங்குகளை செய்துகொடுத்தார். இவர் ஏற்கனவே இத்தாலி நாட்டில் விடுதலைப் புலிகளின் சர்வதேசகிளை ஒன்றின் பொறுப்பாளராக இருந்து செயற்பட்டபொழுது அங்கு அந்த அலுவலகத்தில் கடமையாற்றிய யுவதி ஒருவருடன் வழமைக்கு மீறிய தொடர்புகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கஸ்ரோவால் உடனடியாக கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்ட தவச்செல்வன் என்ற குறித்த போராளி நந்தவனத்தில் இருந்தவாறு வெளிநாடுகளில் இருந்து வன்னிப்பகுதி மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு வருகின்ற மக்களை விசாரணைசெய்து அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பும் இவரைச் சார்ந்ததாக இருந்தது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற தமிழ் மக்களிடம் பணம் கறக்கும் கதாநாயகனாக இவர் நந்தவனத்தில் வலம் வந்துகொண்டிருந்தார்.
குறித்த தவச்செல்வன் என்ற போராளிக்கு கடற்புலிகள் அணியினரை கண்ணிலும் காட்டக்கூடாது. இதனை ஒரு தகுந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திய அவர், தனது பெயரைக் கொண்டிருந்த மற்றொரு ஊடகவியலாளரான யாழ் மாவட்ட ஐ.பி.சி. செய்தியாளராக இருந்த தவச்செல்வன் என்பவரை ஒரங்கட்டும் நோக்குடனேயே குறித்த வலிகாமம் செய்தியாளரை ஐ.பி.சி. க்கு நியமித்தார்.
எவ்வாறிருந்த போதிலும் புலிகளிற்கு பணியாற்றிய அல்லது புலிகளின் ஊடகங்களில் பணியாற்றிய அனைத்து செய்தியாளர்களும் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையே தங்களது ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தனர். சூசைக்கும், தவச்செல்வன் என்ற அந்த ஊடகவியலாளரிற்கும் இருந்த நெருக்கம் காரணமாக கடற்புலிகள் சார்ந்த செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட்டுவந்தமையால் சூசைக்கு இவரது நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியனவாக இருந்தபோதிலும் ஏனைய அரசியல் துறையினர் இவர்மீது கடுப்புடனேயே காணப்பட்டனர்.
இதன் விளைவாக இந்த ஊடகவியலாளர் படையினருடன் கூடுதலான தொடர்புகளை வைத்திருப்பதாக கூறி அரசியல் துறையினர் ஒருகட்டத்தில் இவரது ஊடகச் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால், புலனாய்வுத் துறையினர் மற்றும் கடற்புலிகளின் விசேடதளபதி போன்றோர் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு, அரசியல் துறையினரிடம், குறித்த ஊடகவியலாளரை தாங்கள் கையாள்வதால் அவரது விடயத்தில் நீங்கள் தலையிடக்கூடாது என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டது.
இவ்வாறு புலிகளுக்குள் இருந்த போட்டிகள் ஒருபுறம் இருக்க புலிகளிற்காக செயற்பட்ட ஊடகவியலாளர்களின் மிதமிஞ்சிய செயற்பாடுகள் இன்னொருபுறத்தில் வேகமாக இடம்பெற்று வந்தது. குறித்த தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களுக்குத் தாங்களே புலி முத்திரை குத்தியவாறு தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
இதைவிட விடுதலைப் புலிகளின் மேல்மட்டத்தில் சாதிய ரீதியான ஒரு தோற்றப்பாடும் இறுதிநாட்களில் வலம்வரத் தொடங்கியிருந்தது. இவர்களது சாதியரீதியிலான பாகுபாட்டினை ஊடகங்கள் கணக்கில் எடுக்கத் தவறியிருந்தன அல்லது தெரிந்தே மறைத்து வந்தன.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் யாழ்மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி கடுமையான ஒரு சாதியவாதியாக இருந்தார். ஆனால் தமிழ்ச்செல்வனிற்கு பயந்து இதை வெளியில் காட்ட தயங்கிவந்தார். இந்த அரசியல்துறைப் போராளியான இளம்பரிதியின் தந்தையாருடைய ஏற்பாட்டில் காளைமாடு அடக்கும் போட்டி 1960ம் ஆண்டு தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்றுவந்தது.
இதன்போது இளம்பரிதியின் தந்தை காளை அடக்கும் நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மாலை அணிவிக்க வந்திருந்தார். சலவைத் தொழில் செய்கின்ற ஒரு தொழிலாளி அந்தப் போட்டியில் முதலாவது இடத்தை பெற்றிருந்தார். அந்த வெற்றியாளரை மேடைக்கு அழைத்து நிறுத்தி வைத்துவிட்டு மேடையில் அவருக்கு மாலையைப் போடாமல் அவர் கொண்டுவந்திருந்த காளைமாட்டிற்கு மாலையைப் போட்டு தனது சாதியத் திமிரை இளம்பரிதியின் தந்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்நாட்களில் இது சாதாரணமக்கள் மத்தியில் கண்டன உணர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.
இவரின் மகனான இளம்பரிதியே பின்னைய நாட்களில் யாழ்மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் என்ற பதவியை எடுத்து மக்களை சமமாக வழிநடத்துகின்றோம், மக்களுக்காக உழைக்கின்றோம் என்று முழங்கி வந்தார். இவர்களது முன்னைய செயற்பாடுகளும் பின்னைய செயற்பாடுகளும் ஒரேமாதிரியானதாக இருந்தபோதிலும் இதனை ஊடகங்கள் எவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பலகாரணங்கள் இருக்கின்றபோதிலும் விடுதலைப் புலிகளின் பிழைகள் தொடர்பில் விமர்சனம் செய்கின்ற போக்கை தமிழ் ஊடகங்கள் கையாளத் தவறியமையே விடுதலைப் புலிகளின் அழிவிற்கு உறுதியான வழிகோலியது.
ஒட்டுமொத்தத்தில் தமிழ் ஊடகங்கள் விடுதலைப் புலிகளை உசுப்பேத்தியும், அவர்களது தவறுகளை மறைத்தும் அவர்களை அழிவுக்கு கொண்டுபோன செயற்பாட்டில் ஒருமித்தே முன்னணியில் திகழ்ந்தன. இறுதிநாட்களில் வன்னியில் செயற்பட்ட ஊடகவியலாளர்களும் விடுதலைப் புலிகளை அழிப்பதில் முனைப்புடன் செயற்பட்டனர். யார் அந்த ஊடகவியலாளர்கள் இவர்களும் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களும் எவ்வாறு ஒருமித்து செயற்பட்டனர்? தொடர்ந்துபார்ப்போம்.
வே. அர்ச்சுணன்
(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக