வியாழன், 21 நவம்பர், 2013

25 எம்.பி. (MB) அளவுக்கு மேல் உள்ள பைல்களை அனுப்ப எந்த சேவையைப் பயன்படுத்தலாம்?

ஜிமெயில் மெசேஜுடன் இணைக்கப்படும் பைல் அல்லது பைல்களின் அளவு 25 எம்.பி.யைத் தாண்டுகையில், நாம் வேறு சேவையையே நாட வேண்டியுள்ளது. முதலாவதாக, கூகுளின் ஜிமெயிலிலேயே அத்தகைய ஒரு சேவை உள்ளது. 'Attach files' என்னும் ஐகானை அடுத்து கூகுள் ட்ரைவ் ஐகான் என ஒன்று உண்டு.

அதனைக் கிளிக் செய்து, 10 ஜிபி வரையில் பைல்களை அனுப்பலாம். ஏற்கனவே அனுப்பிய பைல்கள் உங்கள் ஜிமெயில் ட்ரைவில் இருக்கும். அனுப்பும் பைல்களை யார் யார் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டால், அவர்களுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டு, தகவல் தரப்படும்.

அடுத்ததாக, wetransfer.com என்னும் தளத்திற்குச் செல்லவும். இங்கு எந்தவிதமான அக்கவுண்ட்டும் தொடங்க வேண்டியதில்லை. நேராக பைலைஅனுப்பலாம். பெறுபவரின் மின் அஞ்சல் முகவரியினைக் கொடுத்து, அவருக்கான சிறிய அளவிலான செய்தியையும் கொடுத்து, 2 ஜிபி வரையிலான பைலைஅனுப்பலாம். மிகவும் பாதுகாப்பான முறையில் அனுப்ப உங்களுக்கு உதவுவது Dropsend. பாதுகாப்பான முறையில் சுருக்கப்பட்டு அனுப்பப்படுவதுடன், இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையும் கையாளப்படும். Dropbox மூலம், 2 ஜிபி வரையிலான பைலை அனுப்பலாம். அக்கவுண்ட் ஒன்று திறக்க வேண்டும். இதுவும் மேலே குறிப்பிட்ட பாதுகாப்பான முறைகளைக் கையாள்கிறது.

மைக்ரோசாப்ட் அனைவருக்கும் வழங்கும் Skydrive சாப்ட்வேர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, மொத்தம் 7 ஜிபி வரை இதில் சேமிக்கலாம். ஒவ்வொரு முறையும் அனுப்பும் பைலின் அளவு 2 ஜிபி தாண்டக் கூடாது. இதே போல் செயல்படும் இன்னொரு சேவை Amazon Cloud Drive. 5 ஜிபி வரையிலான டேட்டாவினை அனுப்பி சேவ் செய்து, குறிப்பிட்ட சிலருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல