வியாழன், 21 நவம்பர், 2013

பெண்கள் ஏன் அதிகம் சிரிக்கிறார்கள்

சந்தோஷம் தரும் எந்த விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் தெரியுமா?

கார்ட்டூன் படத்தில் உள்ள பஞ்ச்’ வசனம் கூட அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைக்கிறது. இதிலுள்ள சில பஞ்ச் வசனங்களை வாசித்தால் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருக்கின்றார்கள்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் தான் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயற்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறதுபெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது. பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல