இன்னும் சில வாரங்களில், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்களை அனைவரும் பார்க்கலாம். தற்போது, அவர்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மட்டுமே, தளத்தினை அணுகி, தகவல்களைப் பார்க் கலாம்.
இந்த கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும். இருப்பினும் பேஸ்புக் இணைய தளம் தரும் பிரைவசி கண்ட்ரோல்களைப் (privacy controls) பயன்படுத்தி, சில வரைமுறைகளை மேற்கொள்ளலாம்.
பொதுவாக, பேஸ் புக்கில் உள்ள தேடல் கட்டத்தில், பெயர்களை டைப் செய்து, அந்தப் பெயருக்குரியவர் அக்கவுண்ட் வைத்திருந்தால், அவரின் தளப் பக்கத்தினைக் காணலாம். ஆனால், அந்த நபர் அனுமதிக்காதவர்களுக்குப் பக்கத்தில் எதுவும் கிடைக்காது. அல்லது அவர், பொதுவாக அனைவரும் பார்க்கும் வகையில் அந்த அக்கவுண்ட்டினை அமைத்திருக்க வேண்டும்.
இந்த செட்டிங் அமைப்பு, சென்ற ஆண்டில், பேஸ்புக் அக்கவுண்ட்டைத் தொடங்கி விட்டுப் பயன்படுத்தாதவர்களுக்கு நீக்கப்பட்டது. ஆனால் பயன் படுத்துபவர்களுக்கு, இந்த தடை செய்திடும் வசதி தரப்பட்டிருந்தது. இனி, இந்த தடை செய்திடும் தடை நீக்கப்படும். இதற்கான எச்சரிக்கை அறிவிப்பு சில நாட்களில் அனைத்து அக்கவுண்ட் பக்கங்களிலும் தரப்படும்.
இதற்குக் காரணம், இந்த தடையினால் மட்டுமே, ஒருவரின் தனி நபர் தகவல்கள், மற்றவர்களிடமிருந்து தடுக்கப்படுவதில்லை. பிற தேடல் வழிகளிலும், இத்தகைய தகவல்கள் கிடைக்கின்றன.
எனவே, இந்த தடையை பேஸ்புக் தளத்தில் மட்டும் வைத்துக் கொள்வதில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்று பேஸ்புக் கருதுகிறது.
எனவே இந்த செட்டிங்ஸ் அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக, தளத்தில் தரப்படும் டூல்ஸ் வசதியைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்தலாம் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
https://www.facebook.com/settings?tab=timeline என்ற இணையப் பக்கத்தில் கிடைக்கும் டூல்ஸ் வசதி இதற்குப் பயன்படும்.
மேலும் https://www.facebook.com/settings?tab=privacy என்ற பக்கத்திலும் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வழிகள் கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக