பிரஸல்ஸை சேர்ந்த மேற்படி பெயர் வெளியிடப்படாத பெண்ணின் (69 வயது) கணவரான மார்சல் எச் (79 வயது) கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது கணவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி, கணவரின் சடலத்தை நல்லடக்கம் செய்யாது படுக்கையில் வைத்திருந்து, அதிலிருந்து வீசிய துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாது அதனருகே உறங்கி வந்துள்ளார்.
மேற்படி தம்பதியினர் தாம் குடியிருந்த வாடகை வீட்டுக்கு கடந்த ஆண்டிலிருந்து வாடகையை செலுத்தாததால் சினமடைந்த வீட்டு உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறிப்பிட்ட வீட்டிற்கு பொலிஸார் வந்தபோதே அங்கு மார்சல் எச்சின் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.
வெப்பமான காலநிலை காரணமாக மார்சல் எச்சின் சடலம் உலர்ந்து காணப்பட்டது. அதேசமயம் அவரது உள் உறுப்புகளும் அழுகி உலர்ந்திருந்தன.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக