வியாழன், 21 நவம்பர், 2013

யாழ். தாவடியில் பீடி சுற்றும் பெண்கள்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் தாவடியைச் சேர்ந்த பாட்டாளிக் குடும்ப பெண்கள் பாரம்பரியம் பாரம்பரியமாக பீடி சுற்றுகின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஒரு நாள் முழுவதும் பிரயாசைப்பட்டு 1000 பீடிகளை சுற்ற இவர்களால் முடிகின்றது. ஆனால் இதற்கு கூலியாக வெறும் 400 ரூபாயே இவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது.

இவர்களுக்கு தேவையான மூலப் பொருட்களை இடைத் தரகர்களே பெற்று வழங்குகின்றார்கள். அதே போல இவர்களின் உழைப்பையும் சுரண்டுகின்றார்கள்.

இந்நிலையில் நேரடித் தொடர்பை உரிய நிறுவனங்களுடன் ஏற்படுத்தித் தர வேண்டும், நியாய விலையில் பீடியை இந்நிறுவனங்கள் இவர்களிடம் இருந்து பெற ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று இப்பெண்கள் மிகுந்த மன வேதனையோடு கோருகின்றார்கள்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல