வியாழன், 21 நவம்பர், 2013

சம்பந்தனின் கார் கதவை திறந்து தோளிலும் கழுத்திலும் குத்து- வீடியோவை பாருங்கள்

கடந்த 15ம் திகதி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, அவரை யாழ்.பொதுநூலகத்தில் சந்தித்து விட்டு தனது காரில் வெளியேறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கார் கதவை திறந்து அவரை இறங்கடா வெளியே என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கத்தியதுடன் அவர் மீது சிலர் கைகளால் குத்தியுள்ளனர்.

கமருனை சந்திப்பதற்கு ஏற்பாட்டை செய்யாது தான் மட்டும் சந்தித்து விட்டு சென்றதாலேயே காணாமல் போனவர்களின் உறவினர்கள் சம்பந்தன் மீது ஆத்திரம் கொண்டு அவரை தாக்க முற்பட்டனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் தாக்கியதைப்பற்றி கவலைப்படாது சொகுசாக காரில் ஏறிச்சென்ற சம்பந்தன் மீது மக்கள் ஆத்திரம் கொண்டு திட்டித்தீர்த்தனர். மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய சம்பந்தன் சிறிலங்கா அரச விசுவாசியாகி காரில் தப்பி ஓடும் நிலைக்கு வந்தது ஏன்?

தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து சிறிலங்கா அரசுக்கு விசுவாசமாக சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலில் சம்பந்தன் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் தமிழ் மக்கள் மத்தியில் சம்பந்தன் படும்பாட்டை இந்த காணொளியில் பாருங்கள்.




Thinakkathir
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல