வியாழன், 21 நவம்பர், 2013

போலி திருமணம் செய்ய முயன்ற ஜோடி வசமாக பொலிஸாரிடம் சிக்கியது

நாடு கடத்­தப்­ப­டு­வதை தடுக்க அந்­நாட்டைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரை போலி திரு­மணம் செய்ய முயன்ற நைஜீ­ரி­யாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வச­மாக அதி­கா­ரி­க­ளிடம் சிக்கிக் கொண்ட சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்பெற்­றுள்­ளது.

லூயிஸ் எஸெனி என்ற மேற்­படி மாணவர் பிறி­தொரு நபர் மூலம் கர்ப்­ப­ம­டைந்த எமி­லியா ஜினோவா (22 வயது) என்ற பெண்­ணுக்கு 3000 ஸ்ரேலிங் பவுணை கட்­ட­ண­மாக செலுத்தி அவ­ரு­ட­னான போலித் திரு­ம­ணத்­துக்கு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்ளார்.

தென் வேல்ஸில் பொன்­ரி­பிறைட் எனும் இடத்­தி­லுள்ள திரு­மணப் பதிவு அலு­வ­ல­கத்தில் திரு­மணம் செய்ய தயா­ரான வேளை லூயிஸ் தம்மை உண்­மை­யி­லேயே காதல் ஜோடி என காண்­பிக்க எமிலியாவின் முழங்­கால்­களில் கையை வைத்­துள்ளார்.

இதன்­போது எமிலா அதிர்ச்­சி­யுடன் வில­கவும் சந்­தேகம் கொண்ட திரு­மண பதி­வாளர் இது தொடர்பில் பிரித்­தா­னிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்கு வந்த பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் போது குறிப்­பிட்ட ஜோடி போலி­யான திரு­மண பந்­தத்தில் இணை­ய­வி­ருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது.

தொடர்ந்து எமிலியா­வுக்கு 18 மாத சிறைத்­தண்­ட­னையும் லூயிஸுக்கு 21 மாத சிறைத் தண்­ட­னையும் விதிக்க ப்பட்டுள்ளன. சிறைத்தண்டனை முடிந்ததும் லூயிஸ் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப ப்படவுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல