வியாழன், 21 நவம்பர், 2013

விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11

சென்ற நவம்பர் 7 அன்று, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் பதிப்பு 7ல் இயங்கும் வகையில், தன் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11னை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விரைவில் இது தானாக அப்டேட் செய்திடும் வகையில் பயனாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பயன்படுத்தும் பயனாளர் எண்ணிக்கை வேகமாக உயரும். முன்பு பதிப்பு 9 க்குப் பதிலாக, பதிப்பு 10 வெளியான போது, பயனாளர் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்தது.

இம்முறை தானாக அப்டேட் செய்திடும் வசதி தரப்படுவதால், நிச்சயம் பயனாளர்கள் தாங்களாகவே, பதிப்பு 11 ஐப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள்.

ஆனால், சில நிறுவனங்கள், தாங்கள் தங்களுக்கென வடிவமைத்த அப்ளிகேஷன் புரோகிராம்கள், பதிப்பு 11ல் இயங்குமா என்ற சந்தேகத்தினைக் கொண்டுள்ளனர்.

அவர்கள், தாமாக அப்டேட் செய்து, பயனாளர்களைக் கட்டாயமாக பதிப்பு 11 ஐப் பயன்படுத்தத் தூண்டும் நடவடிக்கையை வெறுக்கின்றனர்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐ,

http://www.microsoft.com/de-de/download/details.aspx?id=40902 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளத்திலிருந்தும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல