வெள்ளி, 17 டிசம்பர், 2010

103 ஆவது வயதில் தன்னால் வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்து வைத்த கட்டிட கலைஞர் (படங்கள் இணைப்பு)

பிரெஸிலைச் சேர்ந்த பிரபல கட்டிட கலை நிபுணரான ஒஸ்கார் நிய்மெயர் தனது 103 ஆவது பிறந்த தினத்தில் தன்னால் வடைவமைக்கப்பட்ட அருங்காட்சியகமொன்றை திறந்து வைத்துள்ளார்.

நிதேரோய் எனும் இடத்தில் அவரால் வடிவமைக்கப்பட்டு நிமாணிக்கப்பட்ட ஒஸ்கார் நிய்மெயர் மன்றம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் அவரது 70 வருட கால நவீன கட்டிடக்கலை தொழிலிலான வரைபடங்கள் மற்றும் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நியமெயர், நியுயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் கட்டிடம் மற்ரும் பிரேஸிலின் தலைநகரிலுள்ள முக்கிய கட்டிடங்களை வடிவமைத்தவராவார்


வட ஸ்பெயினிலுள்ள அவிலெஸ் நகரில் அவரது வடிவமைப்பில் நிர்மாணிக்கப்பட்ட ஒஸ்கார் நியமெயர் கலாச்சார நிலையமும் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஒஸ்கார் நியமெயர் மன்றக்கட்டிடமானது அதிநவீன கட்டிடக்கலைக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக கூறப்படுகிறது.

இவர் உலகெங்கும் 600 க்கும் மேற்பட்ட கட்டிடங்களை வடிவமைத்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல