இவ்வாறான தகவலில் உண்மை எதுவும் இல்லை.ஏனெனில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடக் கூறினார். நாங்கள் இவ்வாறான சம்பவங்களில் ஈடு பட்டிருந்தோமானால் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஆசனங்களைப் பெற்றிருக்க மாட்டோம் என்றார்.
இதேவேளை ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் படுகொலைகளுக் கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பிரதி அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் குறித்து கரு த்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறி னார். இவர்கள் குறித்து விக்கிலீக்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளதாவது,
வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கருணா குழுவினர் மற்றும் ஈ.பி.டி.பியினர் கப்பம் பெற்றதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ பக்வின் உத்தரவுக்கு அமையவே வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து இவர்கள் கப்பம் பெற்றதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தி னால் 2007ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியிடப்பட்டு அமெரிக்க இராஜங்கத் திணைக் களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றுமுன்தினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இத் தகவல்களின் பிரகாரம், வடக்கில் இயங்குகின்ற தமிழ் துணைக் குழுக்களின் செயற்பாடுகளில் படையினரைத் தலையிட வேண்டாம் என கோத்தபாய ராஜபக் உத் தரவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தற்போது பிரதி அமைச்சராக உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த ஆவ ணம் அனுப்பப்பட்ட காலப் பகுதியில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன் பல்வேறுகுற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது.
படைத் தரப்பினரின் பாலியல் தேவைகளுக்காக வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்களை கருணா வலுக் கட்டாயமாக பயன்படுத்தியதாகவும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. அத்துடன், டக்ளஸ்தேவானந்தா தலைமை யிலான குழு படைத்தரப்பினருடன் இணைந்து கொலைகளிலும் ஈடுபட்டதாக விக்கிலீக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக