வெள்ளி, 17 டிசம்பர், 2010

பண்பான நடத்தையால் 17 மில்லியன் டொலர் பசு

தனது பண்பான நடத்தையின் காரணமாக நபரொருவர் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசை வென்ற சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றது.

3 பிள்ளைகளின் தந்தையான குறிப்பிட்ட நபர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது, பெண்ணொருவர் அவரை இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னால் வந்து அவர் வாங்க இருந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்நபர் சினமடையாமல் அடுத்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வாங்கிக் கொண்டு சென்றõர். அந்த அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கே 17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசு விழுந்துள்ளது.

இத்தகவலை மேற்படி சீட்டிழுப்பை நடத்திய “பி.சி.எஸ்.ஒ' நிறுவனத் தலைவர் மர்கி ஜுயிகோ “ஏ.எப்.பி.' செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குடியேற்றவாசியான மேற்படி 60 வயது மதிக்கத்தக்க நபர், அதிர்ஷ்ட இலாப பரிசு விழுந்ததையடுத்து தனது குடும்பத்தினரை பார்க்க தாய்நாடு சென்றுள்ளார்.

மேற்படி வெற்றியாளரை எவரும் கடத்தலாம் என்ற அச்சத்தில் அவரது பாதுகாப்பு கருதி அவரது பெயரை இரகசியமாக வைத்துள்ளதாக மர்கி ஜுயிகோ கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல