வெள்ளி, 17 டிசம்பர், 2010

பிரபல விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தின்பண்ட பொதியில் எலிக்குஞ்சுகள்

பிரபல விற்பனை நிலையமொன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நொறுக்கு தின்பண்டப் பொதியொன்றில் எலிக் குஞ்சுகளை கண்டு கொள்வனவாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

பிர்மிங்ஹாமில் அஸ்டன் எனும் இடத்திலுள்ள பிரபல “டெஸ்கோ' விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நொறுக்குத் தின்பண்டப் பொதியை எடுத்த லிஸ் வரே (40 வயது) என்ற பெண்மணி, அதனுள் ஏதோ அசைவதை உணர்ந்து உற்று நோக்கியுள்ளார். இதன்போது அப்பொதியில் சுமார் 6 எலிக்குஞ்சு கள் வரை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது கையடக்கத் தொலை பேசி மூலம் நொறுக்குத் தின்பண்டத்தில் காணப்பட்ட எலிக் குஞ்சுகளைப் படமெடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் “டெஸ்கோ' நிறுவன அதிகாரிகள் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல