வெள்ளி, 17 டிசம்பர், 2010

நிபுணர்கள் குழு இலங்கை விஜயம்

ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கை விஜயம் மேற்கொண்டு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா? அத்துடன் இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒருசில தொகை மக்களிடம் மாத்திரமே விசாரணைகளை நடத்தியுள்ளது அதன் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு அவர் பதிலளிக்கையில் :-

இலங்கை ஜனாதிபதிக்கும் எனக்கும் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலுக்கு பின், தற்போது ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கை விஜயம் மேற்கொண்டு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

நிபுணர் குழுவானது நல்லிணக்க ஆணைக்குழுவின் சிறந்த ஒத்துழைப்புடன் தங்களது நடவடிக்கையினை முன்னேற்றகரமாக விரைவில் முன்னெடுக்குனெ நான் நம்புகின்றேன்.

இதற்கு ஏதுவாக அமைந்த எனக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற நீண்ட நேர கலந்துரையாடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கு குறித்து நான் பாராட்டுகிறேன். என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல