ஷரியன் தேவானியின் பணத்தைப் பெற்று அவரது மனைவியை அன்னியை (28 வயது) காரில் கடத்திச் சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகிய வாடகைக் கார் சாரதியான ஸொலா தொங்காவுக்கு (31 வயது) தென் ஆபிரிக்க நீதிமன்றமொன்று 18 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
ஷரியன் தேவானியே பணத்தை வழங்கி அன்னியை படுகொலை செய்யத் தன்னைத் தூண்டியதாக ஸொலா தொங்கா வழங்கிய தகவல்களின் பிரகாரமே ஷரியன் தேவானி கைது செய்யப்பட்டார்.
ஷரியன் தேவானி ஹோட்டலில் வைத்து ஸொலா தொங்காவுக்கு சிறிய வெள்ளை பிளாஸ்ரிக் பையில் வைத்து பணத்தைக் கையளிக்கும் காட்சி தென்னாபிரிக்காவில் அவர் தங்கியிருந்த 5 நட்சத்திர “கேப் ஸ்டார்' ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த “சிசிரிவி' கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸோலா தொங்கா
இந்நிலையில் விசாரணைகளின்போது ஸோலா தொங்கா, 2007 ஆம் ஆண்டு மருத்துவர் பொக்ஸ் ராகவ்ஜீ (63 வயது) என்பவர் கிங் வில்லியம்ஸ் நகரிலுள்ள தனது வீட்டுக்கருகில் வைத்து கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையும் ஷயன் தேவானியின் ஏற்பாட்டிலேயே இடம்பெற்றதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.அன்னி இறந்ததை அறிந்ததும் மருத்துவர் பொக்ஸ் ராகவ்ஜீயின் மனைவி ஹீதர், 650 மைல் தூரம் பயணித்து கேப் நகருக்கு வந்து தேவானிக்கும் அவரது தந்தை பிரகாஷுக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தமைகுறிப் பிடத்தக்கது.
பொக்ஸ் ராகவ்ஜீ ஹீதர் தம்பதியின் மருமகளான அல்விதா தேவானியின் தோழிகளில் ஒருவராவார். அவர் பிரித்தானிய பிரிஸ்டல் நகரில் தங்கியுள்ளார். அவர் மூலமே மேற்படி தம்பதிக்கு ஷயன் தேவானி அறிமுகமானார்.
அன்னியின் தந்தையார்
இந்நிலையில் ஷரியன் தேவானி தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.புதிய குற்றச்சாட்டு தொடர்பில் மருத்துவர் பொக்ஸ் ராகவ்ஜீயின் மனைவியான ஹீதர் விபரிக்கையில், “இந்த குற்றச்சாட்டை கேட்ட நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஷரியன் தேவானி எனது கணவரை படுகொலை செய்வதற்கு எதுவித காரணமுமில்லை'' என தெரிவித்தார்.
ஷரியன் தேவானி விசாரணைகளுக்கு முகங்கொடுக்கும் முகமாக பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்பட வேண்டும் என தென் ஆபிரிக்கா விரும்புகிறது.
ஆனால் ஷரியன் தேவானி கடந்த வெள்ளிக்கிழமை 250,000 ஸ்ரேலிங் பவுண் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தென்ஆபிரிக்க தலைமை பொலிஸ்ஆணையாளர் ஜெனரல் பெகி சலி விபரிக்கையில், “அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை நாங்கள் விரும்பவில்லை. எம்மிடம் அவருக்கு எதிரான பலமான வழக்கு உள்ளது. அவர் தான் குற்றமற்றவர் என்றால் அதனை இங்கு வந்து நிரூபிப்பது அவசியம்'' என்று தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக