வெள்ளி, 17 டிசம்பர், 2010

விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியது இல்லை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் நிதி வழங்கியது இல்லை என இந்திய தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் கூறியுள்ளார்.

2 ஜி விவகாரத்தில் தமிழ் மையம் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் போரில் இந்திய குற்றப்புலனாய்வுத் துறையினர் நேற்று தமிழ் மையத்தினை சோதனையிட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஆதரவு குரல் கொடுத்திருக்கிறேன்.

தமிழ் மக்களுக்கான எங்களது நற்பணிகளை முடக்க திட்டமிட்டு செய்துவரும் இது போன்ற பிரசாரங்கள், எங்கள் பணிகளை மேலும் வலுப்படுத்துமேயன்றி தளர்த்தாது. தமிழ் மையத்தின் நிலையான நிதி ரூ.1 கோடி. மற்ற சொத்துக்கள் எதுவும் கிடையாது. மக்களின் நன்மதிப்பு தான் எங்கள் சொத்து. முதல் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்தபோது பலரும் உதவியது போல கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் ரூ.3 லட்சம் வழங்கியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல