ஷரியன் தேவானி (30 வயது), தனது மனைவியான அன்னியை (28 வயது) தேனிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றபோது அடியாட்களை வைத்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாகவே ஜேர்மனிய வழிகாட்டி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஷரியன் தேவானி இரகசியமாக தன்னின சேர்க்கையாளராக இருந்த காரணத்தால் அவர து மனைவி அன்னி கொல்லப்பட்டாரா என்ற ரீதியில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்னியின் படுகொலையையடுத்து தொலைக்காட்சியில் ஷரியன் தேவானியின் புகைப்படத்தை அவதானித்த மேற்படி வழிகாட்டி, தானே பொலிஸாருடன் தொடர்புகொண்டு தன்னைப் பற்றிய தகவலை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷரியன் தேவானி பல மாதங்களாக தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டுவந்ததாகவும், மிட்லாண்ட்ஸ் மற்றும் மேற்கு லண்டனில் தன்னுடன் அவர் தன்னினசேர்க்கை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் அந்த வழிகாட்டி தெரிவித்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துக்கும் இந்த வருடம் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தனது பாலியல் சேவைக்காக தனக்கு 1100 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம் வழங்கப்பட்டதாக 6 அடி 2 அங்குல உயரடைய மேற்படி ஜேர்மனிய வழிகாட்டி விசாரணைகளின் போது பொலிஸாருக்கு கூறியுள்ளார்.
ஷரியன் தேவானியின் சட்டத்தரணி செவ்வாய்க்கிழமை “த சண்' ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த குற்றச்சாட்டுகள் முற்றுழுதாக தவறானவையும் அபத்தமானவையுமாகும் என்று கூறினார்.
அதேசமயம், ஷரியன் தேவானியும் தான் தன்னின சேர்க்கையாளர் ஒருவர் அல்ல என வலியுறுத்தியுள்ளார். தான் அன்னியை மிகவும் நேசித்ததாகவும் அன்னியின் படு கொலையால் தான் அதிர்ச்சியடைந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்னியை கடத்திச் சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள வாகன சாரதியான ஸொலா தொங்கா (31 வயது), அன்னியை படுகொலை செய்வதற்கு ஷரியன் தேவானி 400 ஸ்ரேலிங் பவுணை தனக்கு கட்டணமாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
அன்னி இறந்து இரு நாட்களின் பின் ஹோட்டலில் வைத்து ஸொலா தொங்காவுக்கு பணம் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் பொதியொன்றை ஷரியன் தேவானி கையளிக்கும் காட்சி அந்த ஹோட்டலிலுள்ள “சிசிரிவி' கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக