வெள்ளி, 17 டிசம்பர், 2010

மோனாலிஸாவின் கண்களில் சங்கேத எழுத்துக்கள்

உலகப் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சியின் மோனாலிஸா ஓவியத்தின் கண்களில் சங்கேத எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதை ஓவிய நிபுணர்கள் முதல் தடவையாக கண்டறிந்துள்ளனர்.

லியனார்டோ டாவின்சியின் ஓவியங்களிலுள்ள மர்மமான சங்கேத செய்திகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஓவிய வரலாற்று நிபுணர் சில்வனோ வினசெற்றி தலைமையிலான குழுவினரால் இந்த சங்கேத எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோனாலிஸா ஓவியத்தின் கண்களில் லியனார்டோ டாவின்சியின் பெயரின் எழுத்துக்களைக் குறிக்கும் வகையில் "எல்.வி." என்ற எழுத்துக்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக சில்வனோ வின்செற்றி கூறினார்.

வெற்றுக்கண்களால் மேற்படி எழுத்துக்களை அவதானிக்க முடியாது எனவும் உருப்பெருக்கிக் கண்ணாடி மூலம் அதனை தெளிவாக பார்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இந்த 500 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தின் பின்னணி காட்சியில் அமைந்துள்ள பாலத்தில் 72 என்ற எண் எழுதப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இந்த எண் எதனைக் குறிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடியாதுள்ளதாக சில்வனோ வின்செற்றி கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல