வெள்ளி, 17 டிசம்பர், 2010

உலகின் விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம் (படங்கள், காணொளி இணைப்பு)

உலகின் மிக விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம் அபுதாபியில் உள்ள ஒரு ‌நட்சத்திர ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 11 மில்லியன் டாலர்கள் என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியி்ட்டுள்ளன .

கிறிஸ்துமஸ் பண்டிகையினையொட்டி ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் அபுதாபியில் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் சுமார் 40 அடி உயரத்திற்கு கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் பொதுமேலாளர் ஹான்ஸ் ஒல்பர்ட்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த மரத்தின் இதன் சிறப்பம்சம் என்னவெனில் மூன்று கிளைகளை கொண்டு ஒவ்வொரு கிளையில் பந்து வடிவிலான விலையுர்ந்த 181 வகையான வைரம், முத்துக்கள் , பவழ கற்கள் என இம்மரம் முழுவதும் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு சாதாரண கிறிஸ்துமஸ் மரம் வைத்த‌ோம். இந்தாண்டு எதாவது வித்தியாசமாக செய்து வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகளை கவர வேண்டும் என்பதற்காக இம்முயற்சியை மேற்கொண்டோம். கின்னஸ் சாதனை புத்தக்கத்திலும் இடம் பெறும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.





Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல