வெள்ளி, 17 டிசம்பர், 2010

சுடுநீருக்குள் குழந்தையை விழவிட்டு படுகொலை

சுடுநீருக்குள் 16 மாத ஆண் குழந்தையொன்றை விழவிட்டு படுகொலை செய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாயின் காதலர் கைது செய்யப்பட்டுள்ள சம் பவம் அமெரிக்க டலஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
ஜப்ரேலொன் பப்லஸ் என்ற மேற்படி குழந்தையை கையில் வைத்திருந்தபோது, அது தவறுதலாக சுடுநீர் நிரப்பப்பட்டிருந்த கொள்கலனில் விழுந்ததாகவும் தான் திட்டமிட்டு மேற்படி குற்றச்செயலை செய்யவில்லை எனவும் கைது செய்யப்பட்டுள்ள காதலர் கார்ல்னேலஸ் டிலனி சிமன்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் குழந்தையின் அத்தையான வெரோனிக்கா விபரிக்கையில், “குழந்தையின் உடலிலுள்ள காயங்களை அவதானிக்கையில், கார்ல்னேலஸ் திட்டமிட்டே இக்காரியத்தை செய்திருப்பதாக தோன்றுகிறது. அவரின் குழந்தையை சித்திரவதை செய்திருப்பதாக நம்புகிறேன்'' என்று கூறினார்.

குழந்தையின் தாயாரான ஜஸ்மின் தொம்ஸன், தனது காதலர் குழந்தையை திட்டமிட்டு சுடுநீரில் விழவிட்டிருப்பார் என்பதை தான் நம்பவில்லை'' என்று தெவித்தார்.

இந்நிலையில் கார்ல்னேலஸ் தொடர்ந்து டலஸ் நகர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல