வெள்ளி, 17 டிசம்பர், 2010

மனித உரிமை மீறல் செயல்களில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர்! - விக்கிலீக்ஸ் தகவல் வெளியீடு

விக்கிலீக்ஸினால் புதிதாக வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்ற ஆவணத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் இதனைக் கண்காணிப்புக் குழு கண்டும் காணாமல் இருந்தமை பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயற் பட்ட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் செலவு செய்த பணத்தின் ஒரு பகுதியை புலிகள் தமக்குத் தரும்படி கேட்டனர்.பலவந்தமாக படைக்கு ஆட்சேர்க்கும் முறை அங்கு காணப் பட்டது.அத்துடன் அவ்வியக்கத் தில் சேர மறுத்தவர்கள் இரவில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டனர் என்று இலங்கை யிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குத் தகவல் கள் கிடைத்துள்ளதாக ஒரு கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18-25 வயதுக்கிடைப்பட்ட ஒருவரையாவது போராட் டத்திற்கு தரும்படி விடுதலைப் புலிகள் கேட்டனர். கட்டாய ஆட்சேர்ப்புக்குள்ளாகுபவர்கள் 18 வயதினைக் கடந்தவர்களை இராணுவ சேவைக் குச் சேர்ப்பது குறித்து சர்வதேச சமூகம் கேள்வி கேட்க முடியாது என அவர்கள் நம்பினர். குறிப்பிட்ட முகாம்களில் சேவைக்காக இணையும் படி விடுதலைப் புலிகள் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்தனர்.

தவறுபவர்கள் பெரும்பாலும் இரவு நேரங் களில் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்ட னர் என அமெரிக்கத் தூதரகத்திற்கு மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதேவேளை இவ்வருட ஆரம்பத்தில் அமெ ரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்குப் பரிமாறப்பட்ட கேபிள் தகவல் குறிப்பொன்றில் அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் காணப் படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல