திங்கள், 6 டிசம்பர், 2010

16 வயது சிறுவனின் தாக்குதலால் நெற்றிப் பகுதியை இழந்த விபரீதம் (படங்கள் இணைப்பு)

குடிபோதையிலிருந்த 16 வயது சிறுவன் ஒருவனால் மோசமாக தாக்கப்பட்டு பாரிய அளவில் தலை மற்றும் மூளைக் காயங்களுக்கு ஆளாகிய இளைஞர் ஒருவர் தொடர்பான வழக்கு பிரித்தானிய எக்ஸ்டர் கிறவுண் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சம்பவத்திற்குப் பின்னர் தலைக்குள் டிட்டானியம் பிளேட் (titanium plate) வைத்து சரிசெய்யப்பட்டுள்ளது

கடந்த வருடம் வட டெவன் நகரிலுள்ள பிடிபோர்ட் எனும் இடத்தில் ஜக் ஹொப்ஸ் என்ற சிறுவனால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில், ஸ்டீபன் குளோக் (26 வயது) என்ற மேற்படி இளைஞனின் நெற்றியின் அரைப் பகுதி முற்றுழுதாக சேதமடைந்தது.

இந்நிலையில், மருத்துவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு ஸ்டீபன் குளோக்கின் உயிரைக் காப்பாற்றினர்.

அச் சமயம் ஜக் ஹொப்ஸ் சிறுவனாக இருந்ததால், அவனது வழக்கு விசாரணை ஒருவருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது 17 வயதில் காலடியெடுத்து வைத்துள்ள ஜக் ஹொப்ஸ் தனது குற்றச் செயலுக்காக 10 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்கொண் டுள்ளான்.

ஸ்டீபன் குளோக் தன் மீது மோதிய பின் தன்னை உற்றுநோக்கியதால் சினமடைந்தே இத்தாக்குதலை நடத்தியதாக ஜக் ஹொப்ஸ் தெரிவித்தான்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல