திங்கள், 6 டிசம்பர், 2010

கருவில் இருக்கும் சிசுவிற்கு மின் அஞ்சல் முகவரி

அம்மாவின் கருவில் வளரும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சிசுக்கள் இமெயில் மற்றும் இணையதள ‘பேஸ்புக்’குகளில் முகவரியைப் பெற்று வருகின்றன.

இதற்கான ஆய்வு இங்கிலாந்து மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த 8 நாடுகளில் கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான ஏவிஜி.,யால் நடத்தப்பட்டது. அதில், ‘உலகிற்கு அறிமுகம் ஆகும் முன்பே அம்மா கருவில் வளரும் குழந்தைகள் இமெயில் மற்றும் ‘பேஸ்புக்’குகளில் முகவரி பெற்று விடுகின்றன. கருவில் வளரும்போது எடுக்கப்படும் ஸ்கேன் மற்றும் குழந்தை பிறந்தவுடன் எடுக்கப்படும் போட்டோக்களை இணையதளத்தில் உலவ விடுகின்றனர்.

 இங்கிலாந்தில் 23 சதவீத குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இணையதளத்தில் முகவரி பெற்றுவிட்டன. 37 சதவீத அம்மாக்கள் குழந்தை பிறந்தவுடன் இணையதளத்தில் போட்டோவை பதிவு செய்துவிட்டனர். 81 சதவீத அம்மாக்கள் குழந்தைக்கு 2 வயது ஆகும் போது இணையதளத்தில் போட்டோவை பதிவு செய்கின்றனர். பேஸ்புக் மற்றும் மைபேசில் 4 சதவீத குழந்தைகளின் போட்டோவுடன் குறிப்புகளையும் இணைத்துள்ளனர்.

அமெரிக்காவில் இன்னும் வேகமாக 92 சதவீத அம்மாக்கள் குழந்தைகள் 2 வயது ஆகும் போது போட்டோக்களை இணையதளத்தில் பதிந்துள்ளனர். அம்மாவின் கருவில் வளரும்போது எடுக்கப்பட்ட 34 சதவீத குழந்தைகளின் ஸ்கேன்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. 6 சதவீத குழந்தைகளுக்கு இப்போதே சமூகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல